Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

நலிந்து வரும் நூற்பாலைகள்  

 

கோவை மாவட்டத்தில் இப்பொழுது நூற்பு ஆலைகளின் நிலைமை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மில் வேலைக்கு போகும் ஆண்களுக்கு இருந்த மதிப்பே தனி. பெண் கொடுக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். அந்த அளவுக்கு மில்லுக்கும், மில் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிப்பு இருந்தது.

 

பெரிய நூற்பு ஆலைகளாக இயங்கி கொண்டிருந்த ஆலைகள், தொழிலாளர்கள் ஸ்டிரைக், போராட்டம், போனஸ் பிரச்சனை, தொழிற் சங்கங்களின் அதிகமான தலையீடு போன்ற பிரச்சனைகளால் முதலாளிகள் நிருவனத்தை சிறு சிறு யூனிட்களாக  நடத்த ஆரம்பித்தனர். காரணம் ஒரு இடத்தில் பிரச்சனை என்றாலும், இன்னொரு இடத்தில் நடக்கும் தொழிலை வைத்து சமாளித்து கொள்ளலாம். மேலும் அதிக சம்பளம், நிரந்தர வேலை போன்றவை தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டியது இருக்காது.

 

மழை இல்லாத காரணத்தாலும், விவசாய தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காததாலும்,

படித்தவர்கள் விவசாயம் செய்வதற்கு முன் வராததாலும், போதிய வருமானம் விவசாய தொழிலில் இல்லாததாலும் பருத்தி பயிருடுவதை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். இது போன்ற மேலும் பல பிரச்சனைகளால்  நூற்பு ஆலைகளுக்கு தேவையான பஞ்சுகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பஞ்சு விலையை விட நூல் விலை மிக குறைவு. மேலும் காலத்திற்கு தகுந்தாற்ப்போல் சிறிய அளவில் தொழில் செய்பவர்களால் புதிய இயந்திரங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டுவர முடிவதில்லை. வெறும் மனித சக்தியையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை.

 

சாதரணமாக ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று குழந்தைகளுக்கு மேல் இருந்த நிலை மாறி, இப்பொழுது வீட்டிற்கு ஒரு குழந்தை போதும்  என்ற நிலையில் தற்பொழுது பெரும்பாலான மக்கள் உள்ளனர். மக்களிடையே கல்வியறிவு அதிகமாகி விட்டது. ஆதலால் பெரும்பாலானவர்கள் சிறிய நிறுவனகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவது இல்லை. அப்படியே போனாலும் மேஸ்திரி,   சூபெர்வைசர் போன்ற மேம்போக்கான வேலைகள் செய்யத்தான் விரும்புகின்றனரே ஒழிய சாதரண வேலைகள் செய்ய ஆளில்லை. இது போன்ற காரணங்களால் மில் வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. விளைவு...

 

பஞ்சாலைகள்  இழுத்து மூடப்படுகிறது. இதன் தொடர்ச்சிதான் விசைதறியும், பனியன் தொழில்களும், அதனை சார்ந்து உள்ள மற்ற தொழில்களான சைசிங், சாயமிடுதல்,  போன்றவைகள்.

 

ஒருபக்கம் (Raw material) பஞ்சு கிடைக்காமல், வேலைக்கு ஆள் கிடைக்காமல்புதிய தொழில் நுட்பத்தை புகுத்தாமல் போன்ற காரணங்களால் தொழில் முடக்கம், வேலையில்லா திண்டாட்டம்இன்னொருபக்கம் அதை சார்ந்து உற்பத்தி ஆகி வருகின்ற பொருட்களின் (finished goods) வரத்து குறைவால் ஏற்படும் விளையேற்றம்.

 

சரி. இதற்கு என்னதான் தீர்வு

 

அரசு விவசாயிகளை, விவசாய தொழிலை  ஊக்குவிக்க வேண்டும்.  கடன் தள்ளுபடிகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு. உண்மையான விவசாயிகளுக்கு அது சென்றடையவில்லை. இன்னும் விவசாயிகள் கிழிந்த கோவணத்துடன்அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழி இன்றி ஏங்கி கிடக்கிறான். அவன் என்ன செய்வான் பாவம். மழை மாதிரியே அரசும் அவனை ஏமாற்றினால். விவசாயி மட்டும் மகிழ்ச்சியாக இருந்தானானால் நிச்சயம் இந்த நாட்டில் வறுமை, பசி பட்டினி இருக்காது.

அதே போல் சிறு தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதற்கான வழிமுறைகளை அரசே ஏற்பாடு செய்து தரவேண்டும். அரசு, வங்கிகளில் அவர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். வெளி நாட்டு நிறுவனகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் எத்தனையோ உதவிகள் செய்யும் அரசு, சிறுதொழில் செய்பவர்களுக்கு அவர்களின் பிரச்சனை சார்ந்த உதவிகள் செய்து தர வேண்டும்.


 

இராசிகள்

கிரகங்கள்

தமிழ் வருஷங்கள்

நட்சத்திரங்கள்

திதிகள்

யோகங்கள்

கரணங்கள்

 

கிரஹங்களின் நட்பு வீடுகள்

கிரஹங்களின் பகை வீடுகள்

கிரஹங்களின் பார்வை

கிரஹங்களின் ராசியில்  

சஞ்சரிக்கும் காலம்

திருமணப்பொருத்தங்கள்