![]() |
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial |
|
ஞானமற்ற அரசாட்சி, நாட்டுக்கு
கேடு.. சொல்கிறார் திருமூலர் ஞானம் என்பது மனிதனாய்ப் பிறந்த அனைவருக்கும் தேவையான ஓன்று. ஏதோ சாமியார்களுக்கும், வயதான கிழடுகளுக்கும் உரிய முயற்சி என்று கருதிவிடக்கூடாது. நாட்டை ஆளும் அரசனுக்குக் கட்டாயம் ஞானம் வேண்டும். என்கிறார் திருமூலர். ஞானமில்லாத அரசன் ஆளும் நாட்டில் மழை பெய்யாது, வறட்சியும் பசியும் பிணியும் தாண்டவமாடும்!' என்கின்றன திருமறைகள். "ஞானமில்லாத
அரசன் எமனை விடக்கொடியவன்" என்பது திருமூலர் கூற்று. "கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனின் காலன் மிக நல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் நல்லாரைக் காலன் நணுக நில்லானே" இதன் பொருள் என்ன தெரியுமா?. ஞானமில்லாத அரசனும் எமனும் ஏறத்தாழ ஓன்றே. நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் ஞானமில்லாத அரசன் எமனை விடக்கொடியவன் என்றுகூடச்சொல்லலாம். காரணம், ஞானமில்லாத அரசனுக்கு மனிதர்களின் தரம் தெரியாது. தனக்கு பிடிக்கவில்லையென்றால் சிறைப்பிடிப்பான். கொலை செய்ய உத்திரவிடுவான். இயேசு நாதர், சாக்ரடீஸ் போன்ற மகான்கள் அப்ரடி ஞானமில்லாத அரசர்களால் கொலை செய்யப்பட்டவர்களே. எமன் அப்படியல்ல. அவன் தர்மம் தெரிந்தவன். அதனாலேயே அவன் எமதர்மன் என்று பெயர் பெற்றான். பூமி அதிர்ச்சி என்ற பெயரிலும் தீ விபத்து என்ற பெயரிலும் புயல்-வெள்ளம் என்ற பெயரிலும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான உயிர்களை அலட்சியமாகக் கவர்ந்து செல்லும் அவன் - ஞானிகள், மகான்களின் பக்கத்தில் மட்டும் வருவதே இல்லை. மக்கள் ஞானம் பெற்றால் மட்டுமே ஞானமுள்ள அரசனைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே ஞானப்பாதையை உணர்த்துவது அறிஞர்களின் தலையாய கடமையாகும். நன்றி கவனகர் முழக்கம் - |
கிரகங்கள் தமிழ் வருஷங்கள் |
|
திதிகள் யோகங்கள் கரணங்கள்
|
|
|
கிரஹங்களின் நட்பு வீடுகள் கிரஹங்களின் பகை வீடுகள் கிரஹங்களின் பார்வை கிரஹங்களின் ராசியில் சஞ்சரிக்கும் காலம் திருமணப்பொருத்தங்கள் |
|
|
|
|