Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

   
மகான் அரவிந்தர் (Sri Aurobindo)

     இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதிகளின் தலைவராய் திகழ்ந்த அரபிந்தோகோஷ் என்ற வீரர்தான் ஸ்ரீ. அரவிந்தர் என்பது பலருக்குத் தெரியாது.  கல்கத்தாவில் 15.08.1872 ல் ஓரு செல்வந்தர் வீட்டில் பிறந்த ஸ்ரீ. அரவிந்தர் 7 வயதிலேயே கல்வி கற்க இங்கிலாந்து அனுப்பப்பெற்ற அவர், கிரேக்கம், லத்தின், பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தார்.

     பல்கலைக் கழகங்களில் பயின்று ICS தேர்ச்சி பெற்றுக் கல்கத்தா திரும்பிய அவர் பரோடா சமஸ்தானத்தில் மிக உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வந்தார்.

     1905 ல் வங்கப் பிரிவினை காரணமாக இந்திய விடுதலைப் போரின் தேவையை உணர்ந்த அவர், உடனடியாக பணியை உதறிவிட்டு, தீவிரவாதிகளின் தலைவராக மாறினார்.

     அரவிந்தரை கைது செய்யவும், நாடு கடத்தவும் ஆங்கிலேய அரசு திட்டமிட்டிருந்த வேளையில் வங்காளத்திருந்து தப்பி ஓரு கப்பலில் பயணித்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு 04.04.1910 ல் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் முழுமையாக ஆன்மீகப் பாதைக்கு மாறினார்.

     பிரான்சு நாட்டின் பாரிசில் பிற்த அன்னை மீரா ஓர் ஆன்மீகத்தேடலுடன் புதுவைக்கு வந்தார். ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீகக்கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அன்னை, தனக்குரிய இடமும், தன் பிறவிக்குரிய பணியும் இந்தியாவில்தான் உள்ளது என உணர்ந்து ஸ்ரீ. அரவிந்தர் ஆசிரமத்தின்  முழுப்பொறுப்பையும் ஏற்றார்.

     ஆன்மீகப்பாதையில் பல உயர்ந்த அனுபவங்களை பெற்றவர் ஸ்ரீ. அரவிந்தர்.  05.12.1950 அன்று ஸ்ரீ. அரவிந்தர் தம் பூத உடலை நீத்தார்.

     நாட்டுபற்று, ஆன்மநேயம், இறையன்பு என்னும் மூன்று பண்புகளுக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்த மகான் ஸ்ரீ. அரவிந்தர்.

நன்றி கவனகர் முழக்கம் -                           

இராசிகள்

கிரகங்கள்

தமிழ் வருஷங்கள்

நட்சத்திரங்கள்

திதிகள்

யோகங்கள்

கரணங்கள்

 

கிரஹங்களின் நட்பு வீடுகள்

கிரஹங்களின் பகை வீடுகள்

கிரஹங்களின் பார்வை

கிரஹங்களின் ராசியில்  

சஞ்சரிக்கும் காலம்

திருமணப்பொருத்தங்கள்