Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

சொந்தப்புத்தி  

சொந்தப்புத்தி

எனக்கு கடவுள் சொன்னார். நான் கடவுளுடைய அவதாரம். நான் கடவுளாக இருக்க வேண்டும்  என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தை புகுத்தியதன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியை பயன் படுத்த வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல 2000, 3000 வருஷங்களாக இப்படி. மனிதன் என்பவன் அருமையான அறிவைப்படைத்தவன். அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத்தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ளவேண்டியவனாக ஆகி இருக்கிறான்.

 

மூடநம்பிக்கையும், முட்டுக்கட்டையும்

எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள்- நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது ?” எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனைக் குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியில்லை என்பான். காக்கா கத்துன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான்.குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான் முன்னெச்சரிக்கையாக ஓருத்தனையும் தொட மாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான். மனுஷந்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது. மற்றும் இந்தக் கிழமையாகாது, இந்த நேரம் தப்பு, இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது?.  அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு. நாம் அப்படியே இருக்கிறோம்.

 -- தந்தை பெரியாரின் சிந்தனையும் பகுத்தறிவும் என்ற புத்தகத்திலிருந்து....