![]() |
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial |
| எண்ணத்தின் ஆதிக்கம் | |
|
நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஓவ்வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செயலாகத் திரும்பி வருவது போல், நம் செயல்கள் பிறரிடமும், பிறரது செயல்கள் நம்மிடமும் செயல்படுகின்றன. தீமை செய்கின்ற ஓருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும்பொழுது, மேலும் மேலும் வலிமையடைந்து, எப்போதும் நல்லது செய்யக் கற்றுக்கொள்கிறான். இந்த உண்மையை நீங்கள் கவனீத்திருப்பீர்கள். ஓரு செயல் ஏற்படுத்தும் தாக்கத்தின் இத்தகைய தீவிரத்தை, நமது செயல்கள் பரஸ்பரம் ஓவ்வொருவர் மீதும் விளைவுகளையும் எதிர் விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் அல்லாமல், வேறு எதன் மூலமாகவும் விளக்க முடியாது. பௌதீக விஞ்ஞானத்திலிருந்து இதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நான் ஓரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது, என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலையில் இருக்கிறது. இந்த அதிர்வு நிலையில் இருக்கின்ற மற்றெல்லா மனங்களும் என் மனத்தால் பாதிக்கப்படலாம். ஓர் அறையில் பல்வேறு இசைக்கருவிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை அனைத்தின் தநதிக்கம்பிகளும் ஓரே போல் சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது ஓரு கருவியின் தந்தியை மீட்டினால், மற்ற கருவிகளும் அதே சுரத்தைத் தரும் விதத்தில் அதிரத்தொடங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது போலவே குறிப்பிட்ட அதிர்வுநிலையிலுள்ள எல்லா மனங்களும், அதே நிலையிலுள்ள எண்ணத்தால் சம அளவு பாதிக்கப்படுகின்றன. ஆனால் தூரம் மற்றும் வேறு பல காரணங்களைப் பொறுத்து இந்தப் பாதிப்பின் தாக்கம் மனதிற்கு மனம் மாறுபடுகிறது. என்றாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையிலேயே அந்த மனம் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக, நான் ஓரு தீமை செய்கிறேன். அப்போது என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலையில் இருக்கிறது. அப்போது எல்லா மனங்களும் அந்த அதிர்வால் பாதிக்கப்படலாம். அதுபோலவே நான் நல்ல காரியம் செய்யும்போது, என் மனம் வேறோர் அதிர்வுநிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி ஓரு மனத்தின் மீது மற்றொரு மனத்திற்குள்ள ஆற்றல், ஓரளவிற்கு அந்த அதிர்வு கூடியும் குறைந்தும் இருப்பதற்கு ஏற்பவே இருக்கும். இந்த உதாரணத்தை தொடர்வோம். ஓளியின் அலைகள் ஓரு குறிப்பிட்ட இலக்கை அடையும் முன் லட்சோபலலட்சம் ஆண்டுகள் பயணம் செய்யலாம். அதுபோலவே எண்ண அலைகளும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் அதிர்கின்ற ஓரு பொருளைச் சென்றடைய ஏற்றவிதத்தில் அதிர்கின்ற ஓரு பொருளைச் சென்றடைய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பயணம் செய்ய நேரலாம். எனவே இந்த வானவெளி அத்தகைய நல்ல மற்றும் தீய அலைகளால் நிரம்பி இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஓவ்வொரு மூளையிலிருந்தும் வெளிக்கிளம்புகின்ற ஓவ்வொரு எண்ணமும் அதை ஏற்றுக்கொள்வதற்கு பொருத்தமான பொருளை அடையும் வரையில் அதிர்ந்துகொண்டே இருக்கிறது என்று சொல்லலாம். அவற்றை ஏற்றக்கொள்வதற்கு தகுதியாக இருக்கின்ற மனம் உடனடியாக ஏற்றக் கொள்கிற்து. ஓருவன் தீய செயலைச் செய்யும் பொழுது அவன் தன் மனத்தை ஓரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறான். அப்போது அதே அதிர்வு நிலையில் வானவெளியில் மிதந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற எண்ண அலைகள் எல்லாம் அவனது மனத்தில் நுழைய முயல்கின்றன. இதனால்தான் பொதுவாக, தீமை செய்துகொண்டே இருக்கிறான். அவனது செயல் தீவிரமாகிகது. நன்மை செய்பவனின் விஷயமும் இதுதான். அவன் வான வெளியில் உள்ள நல்ல அலைகளுக்காகத்தன்னைத் திறந்து வைக்கிறான். அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன. எனவே நாம் தீமை செய்யும் போது இரண்டு வகையான அபாயங்களை விளைவிக்கிறோம். முதலில் நம்மைச் சுற்றியுள்ள தீய ஆதிக்கங்கள் நம்மீது செயல்பட நாமே இடம் கொடுக்கிறோம். இரண்டாவதாக மற்றவர்களைப் பாதிக்கின்ற- அது ஓரு வேளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கலாம். தீமையைச் செய்யும் போது நாம் நம்முடன் சேர்த்துப் பிறரையும் துன்புறுத்துகிறோம். மனிதனிலுள்ள மற்ற எல்லா சக்திகளையும் போலவே நன்மை தீமை ஆகிய சக்திகளும் புறத்திலிருந்தே வலிமையைப் பெறுகின்றன. இந்த லட்சியத்தால் உங்களை நிறையுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் இதையே சிந்தியுங்கள். இந்தச் சிந்தனையின் ஆற்றலால் உங்கள் செயல்கள் அனைத்தும் பெருக்கட்டும். மாறுபாடு அடையும், தெய்வீகமாகும். ஜடப்பொருள் வலிமையானது என்றால் சிந்தனை எல்லாம் வல்லது. இந்தச் சிந்தனை உங்கள் சிறப்பு, உங்கள் மகிமை இவை பற்றிய சிந்தனையால் உங்களை நிறையுங்கள். உங்கள் தலையில் மூட நம்பிக்கை எதுவும் புகாதிருக்கக் கடவுள் அருள் புரியட்டும். பிறப்பிலிருந்தே இத்தகைய மூடநம்பிக்கைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்குமாறும் நமது வளர்ச்சியைக் கெடுக்கின்ற பலவீனம்,தீமை போன்ற கருத்துக்கள் நம்மைச் சூழ்வதையும் கடவுள் தடுப்பாராக! மிக உயர்ந்த மிகச் சிறந்த உண்மைகளை அறியவல்ல எளிய பாதைகளை மனிதன் அடையக் கடவுள் கருணை செய்வாராக! மனிதன் இவற்றைக் கடந்தேயாக வேண்டும். உங்கள் பின்னால் வருபவர்களுக்கு பாதையை மேலும் கடினமாக்காதீர்கள். - ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் - கோயம்புத்தூர். |
கிரகங்கள் தமிழ் வருஷங்கள் |
|
திதிகள் யோகங்கள் கரணங்கள்
|
|
|
கிரஹங்களின் நட்பு வீடுகள் கிரஹங்களின் பகை வீடுகள் கிரஹங்களின் பார்வை கிரஹங்களின் ராசியில் சஞ்சரிக்கும் காலம் திருமணப்பொருத்தங்கள் |
|
|
|
|