Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

கடவுளின் கருணை  

 

       அன்பான கடவுள்ங்கறானே, எந்தக்கடவுள் கருணையானவன்?  போய்பாரேன் கடவுளை எல்லாம்! எந்தக் கடவுளைப்பார்த்தாலும் கையிலே கொடுவாளு, ஈட்டி, வேலாயுதம், சூலாயுதம், மழு, கொட்டபுளி, வில்லு, கத்தி, கொலைகாரப் பசங்களுக்கு என்ன வேணுமோ அதெல்லாம் கடவுள் கையிலே கொடுத்திருக்கானுங்க. அது எப்படிக் கடவுள் ஆகும்?”  அன்பே உருவானக் கடவுள், அன்பே சிவன், சிவனே அன்பு என்று இருக்கும் போது சிவனுக்கெதுக்கய்யா வேலாயுதம் சூலாயுதம். எதுக்குச்சொல்றேன். சிரிக்கறதுக்காகச் சொல்லலை. நம்மை எவ்வளவு முட்டாளாக்குகிறான். அதை வெச்சிக்கிட்டுதானே நாமெல்லாம் இப்படி மனிதனாயிருக்கிறோம். அன்பே வடிவான கடவுளுக்கு என்ன வேலை? அவதாரமா வந்த கடவுள் சிவனுக்குப் பிள்ளையா பொறந்த  பசங்க சிவனோட மகன், விஷ்ணு, இந்தப் பசங்களுக்கெல்லாம் என்ன வேலை? அவனைக் கொன்னான், இவனைக் கொன்னான், அசுரனைக் கொன்னான், ராட்சதனைக் கொன்னான், எத்தனை பேரைக் கொன்றான், மூணு கோடி பேரைக் கொன்றான். அஞ்சுக்கோடி பேரைக் கொன்றான். கசாப்புக் கடைக்காரப் பசங்களா? இல்லைக் கொலைக்காரப் பசங்களா? கடவுள் பேரை வச்சிக்கிட்டு இருக்கிற பசங்க! இராமாயணம் என்னடான்னா?  ராமன் மூணுகோடி பேரைக் கொன்றான். பூமி பாரத்தையே கொறச்சான். கொலை வேலைகளைத் தானே கடவுளுக்கே ஓப்படைச்சான். சிந்திச்சா இதெல்லாம் வெளியே வருமே! முட்டாள்தானே! நமக்கென்னத்துக்கு அப்படீன்னு நம்பிக்கிட்டு போவான்! குறை சொல்லறதுன்னா, என்ன அர்த்தம்?  எத்தனை பேரை ஏமாத்திப் போட்டான்! எத்தனை பேரு மடையன்களாக இருக்கிறான்!  இந்தக் கதைகளினாலே, இந்தக் கோயில்களினாலே, இந்தச் சாமிகளினாலே என்ன பயன்?

 -- தந்தை பெரியாரின் சிந்தனையும் பகுத்தறிவும் என்ற புத்தகத்திலிருந்து..