![]() |
Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial |
| மகரதீபத்தின் அற்புதம் | |
|
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின் போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலை முகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது என்றும், ஐயப்பனே ஜோதிவடிவாய் காட்சியளிக்கிறார் என்றும் பரவலாக ஐயப்ப பக்தர்களுடைய நம்பிக்கை. இப்படியிருக்க சபரிமலை தலைமை தந்திரி கண்டரு மகேஸ்வரு அவர்கள், கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் மகர விளக்கு பூஜையின் போது, பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படும் மலை முகட்டில் தெரியும் ஜோதி இயற்கையானது அல்ல என்றும், அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரு, சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மகர விள்ககு வேறு, மகர ஜோதி வேறு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதாவது மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், மகர விளக்கு என்பது புராண காலத்தில் ஐயப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். மகர விளக்கும் மகர ஜோதியும் ஓன்று என நினைக்கும் சிலரது கருத்துக் காரணமாக இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது இது தேவையில்லாதது என்று அவர் கூறியிருந்தார். இது பற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுரானந்தன், மகர விளக்கு தீபம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
சரி. இதைப்பற்றி ஈ. வெ. ரா. பெரியார் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள அவருடைய புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தோம். 'அய்யப்ப பக்தர்களுக்காக' என்ற அவருடைய புத்தகத்தில் 'மகரதீபத்தின் அற்புதம்' என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு உள்ளது.
திரு. ராகவன்பிள்ளையும் அவருடன் சேர்ந்தவர்களும் ஓரு தனிப்பந்தம் கட்டுவதற்கு பதிலாக பரவலாக மரக்கிளைகளை நாட்டினார்கள். அவற்றில் எல்லாம் துணிப்பந்தம் கட்டி எண்ணையையும் நனைத்து தயாராய் இருந்தனர். மாலை மங்கியது. பொன்னம்பலமேட்டிலிருந்து ஆட்கள் டிரான்சிஸ்டரில் சபரிமலை நிகழ்ச்சிகளின் நேர்முக வர்ணணைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென பக்த ஜனங்கள் எல்லாம் அம்பலமேட்டை நோக்கி மகர ஜோதி காண திரும்பி இருக்கின்றனர்” என்று கூறப்பட்டது. கேட்டவுடனே அம்பலமேட்டிலிருந்தவர்கள் பந்தங்களுக்கு தீயூட்டினர். உடனே ரேடியோவில் கேட்டது, “மகர ஜோதி அதோ தோன்றிவிட்டது” அடுத்த நிமிடம் தொடர்ந்து “ ஜோதியின் ஓரு வரிசை தெரிகிறது”. இதைக் கேட்டபோது வாணங்களுக்கு தீயிட்டனர். அவை சப்தத்துடன் வானத்தில் பாய்ந்தன. அப்போது ரேடியோவில் இப்படி சொல்லப்பட்டது. “மகர ஜோதி பல வண்ணங்களில் வானத்தை நோக்கி உயர்கிறது”. பிறகு வர்ணணையாளர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவர் திகைப்பில் மூழ்கி விட்டார். இத்தனை அற்புதங்களை அவர் கண்டதே இல்லை. அறிவாளியாகிய அவருக்கு மகர ஜோதியின் ஏமாற்று புரிந்திருக்க வேண்டும். அவர் ‘ இனி, நான் மைக்கினை மிஸ்டர் தினகரனின் கையில் கொடுக்கிறேன்” என்று கூறினார். மைக்கினை வாங்கிய மிஸ்டர் தினகரனுக்கு விஷயம் ஏமாற்று வேலை எனத் தெரிகிறது. எனவே, சுற்றுபுறங்களை வர்ணிக்கத் தொடங்கினாரேயன்றி, மகர ஜோதியை விவரிக்க முயலவில்லை. இதுதான் மகர தீபத்தின் அற்புதம். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
|
கிரகங்கள் தமிழ் வருஷங்கள் |
|
திதிகள் யோகங்கள் கரணங்கள்
|
|
|
கிரஹங்களின் நட்பு வீடுகள் கிரஹங்களின் பகை வீடுகள் கிரஹங்களின் பார்வை கிரஹங்களின் ராசியில் சஞ்சரிக்கும் காலம் திருமணப்பொருத்தங்கள் |
|
|
|
|