Softec Computer

Softec Computer Education, Sulur pirivu, Thennampalayam, Chinniampalayam

Airway Times | Train Times | Call Taxi | Pin codes | Ambulance | Hospitals | Blood Bank | Eye Bank | Best Schools | Best Colleges | Indian Baby Names | Best Newspaper & Magazines | Matrimonial

                                                             Home            ஜோதிடம்    வாஸ்து            நியுமராலஜி

எதிர்காலம் யார் கையில்...  

தேர்தல் வரும் நேரம். ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆளாத கட்சி, தூங்கி கொண்டிருந்த கட்சி, தொழிலை விரிவு படுத்திக் கொள்ளவும், சம்பாதித்ததை காப்பற்றிக் கொள்ளவும் புதிதாத வந்த கட்சி, இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் கட்சி என அனைவரும் ஆளாளுக்கு சவுடால் விட ஆரம்பித்து விட்டார்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இவர்களெல்லாம் மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டிருப்பது.

 

 ஏனென்றல் எதையாவது இலவசமாக  கொடுத்தால் வாங்கிக்கொண்டு மற்றதையல்லாம் மறந்து விடும் கீழ்த்தரமான  குணம் நம்மிடம் இருப்பதால், தேர்தலின்போது தலைக்கு ஐம்பது அல்லது நூறு ரூபாய் ஒரு நாள் மட்டும் செலவு செய்தால், அடுத்து வரும் அஞ்சு வருடம் நாட்டை கொள்ளை அடித்து போய்விடலாம் என்பது இன்றைய அரசியல்வாதிகளின் கணக்கு..

 

இன்னொரு மோசமான இயல்பான குணம் மக்களிடம் உள்ளது. நம் மனது ஏதாவது ஒரு  அரசியல் தலைவருக்கோ, சாமியாருக்கோ, நடிகனுக்கோ அபிமானியாக மாறிவிட்டால், அவன் எத்தனை தவறுகள் தொடர்ந்து செய்தாலும், அவனை ஏற்று கொள்ளுதல், அவனுக்காக பரிந்து பேசுதல். விளைவு.....

 

சின்ன வீடு, பெரிய வீடு, ரெண்டாவது வீடு, மூணாவது வீடு இன்னும் பல வீடுகளும் மற்றும் அதன் வாரிசுகளும் ஐந்தாறு தலை முறைக்கு செல்வசெளிப்புடன் வாழ நாட்டை சுரண்டி, மக்களை ஓட்டையாண்டி ஆக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடுகிறார்கள். சுதந்திரம்  வாங்கி அம்பது வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் சாதரண குடிமகன் சொந்தமாக இடமோ, வீடோ வைத்திருக்க முடியாத சூழ்நிலை.

 

சரி. இதற்கு என்னதான் தீர்வு. படித்தவர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வர வேண்டும். சிந்தித்து பார்த்து ஓட்டு போட வேண்டும். ஒரு அரசியல்வாதிக்கு அபிமானியாக இருக்கிறோம் என்பதற்காகவோ, கட்சியின் தொண்டன் என்பதற்காகவோ, நமது ஜாதிக்காரன் என்பதற்காகவோ ஓட்டு போடக்கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் தலைவன் படித்தவனாக இருக்க வேண்டும். நிர்வாகத்திறமை உள்ளவனாக இருக்க வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்ந்து முடிவு எடுப்பவனாக இருக்க வேண்டும்.

 

படிக்காத பாமர மக்களுக்கு முதலில் கல்வியறிவைக் கொடுக்க வேண்டும். பின்னர் ஓட்டு போடும் உரிமையை கொடுக்கலாம். ஹெர்மன் எல். லேலேண்ட் என்ற அறிஞன் அழகாக சொல்லியிருக்கிறான். மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது சாபக்கேடாய் அமையும்.

 

சாதரண மக்களாகிய நாம் இனியும் சிந்தித்து செயல்படாமல் நமக்கென்ன என்று இருந்தால் காணாமல் போவது என்னவோ நம் குடும்பமும் நம் குழந்தைகளின் வாழ்க்கையும் தான்.


 

இராசிகள்

கிரகங்கள்

தமிழ் வருஷங்கள்

நட்சத்திரங்கள்

திதிகள்

யோகங்கள்

கரணங்கள்

 

கிரஹங்களின் நட்பு வீடுகள்

கிரஹங்களின் பகை வீடுகள்

கிரஹங்களின் பார்வை

கிரஹங்களின் ராசியில்  

சஞ்சரிக்கும் காலம்

திருமணப்பொருத்தங்கள்